நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 60 வயதில் ஓய்வு..! தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ள சபாநாயகர்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்குவது குறித்து சபாநாயகர் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் அரசியல் அமைப்பின் பிரகாரமே செயற்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க ஊழியர்கள் 60 வயதினை அடைந்ததும் ஓய்வுறுத்தப்படுவதாகவும், இதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஓய்வுறுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரின் நிலைப்பாடு
இந்த கோரிக்கை தொடர்பில் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
அரசியல் அமைப்பின் பிரகாரம் 60 வயதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வுறுத்தப்படுவார்கள் என தீர்மானிக்கப்பட்டால் அந்த தீர்மானத்தை தாம் எதிர்க்கப் போவதில்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
CATEGORIES செய்திகள்