தமிழர் பகுதியில் அத்துமீறும் இராணுவம் – அநீதிக்கு துணைபோகும் தமிழ் இளைஞர்கள்

தமிழர் பகுதியில் அத்துமீறும் இராணுவம் – அநீதிக்கு துணைபோகும் தமிழ் இளைஞர்கள்

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லக் காணியை இலங்கை இராணுவம் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஏற்கனவே உடைக்கப்பட்ட மாவீரர்களின் நினைவுக்கற்களை மக்கள் ஓரிடத்தில் குவித்துள்ளனர்.

அந்த கற்குவியலை முற்றாக இராணுவம் அந்த இடத்தில் இருந்து அகற்றிவிட்டு மாவீரர் துயிலுமில்ல காணியில் நான்கு அரச மரக்கன்றுகள் உட்பட மரக்கன்றுகளை நடுவதற்கு முயற்சித்தவேளை கறடியனாறு தமிழ்தேசிய மக்களியக்கத்தினாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த அநீதியான செயலில் அப்பகுதியில் இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவுடன் சேர்ந்து செயற்படும் தமிழ் இளைஞர்கள் சிலர் சம்மந்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS