நாளை முதல் அதிகரிக்கும் மற்றுமொரு கட்டணம்

நாளை முதல் அதிகரிக்கும் மற்றுமொரு கட்டணம்

சான்றளிப்பு சேவைகளுக்கான தூதரகக் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் பரீட்சை சான்றிதழ்களுக்கு 800 ரூபாவும், ஒரு வெளிநாட்டுப் பிரஜைக்கு இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் எந்தவொரு ஆவணத்துக்கும் 3,000 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

அத்துடன், ஏதேனும் ஏற்றுமதி ஆவணம் ஒன்றுக்கு 8,000 ரூபாவும், வேறு ஏதேனும் ஆவணத்துக்கு 1,200 ரூபாவும் அறிவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS