புடவை உந்துருளி சில்லுக்குள் சிக்குண்டு விபத்து – பெண் உயிரிழப்பு..! யாழில் சம்பவம்

புடவை உந்துருளி சில்லுக்குள் சிக்குண்டு விபத்து – பெண் உயிரிழப்பு..! யாழில் சம்பவம்

யாழ்.கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட வீதியில் உந்துருளியில் சென்ற குடும்ப பெண்ணொருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணும், அவரது மகளும் நேற்றைய தினம் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவரது புடவை உந்துருளி சில்லுக்குள் சிக்குண்டு விபத்திற்குள்ளாகி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன், அவருக்குப் பின்னால் உந்துருளியில் பயணித்த மகள் காயமடைந்த நிலையில் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விபத்து சம்பவம் குறித்து கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS