யாழில் 1000 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழில் 1000 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

18 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1,000 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனைக்கோட்டை ஆறுகால்மடம் மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த 24,25 வயதுடைய இருவரே இன்று கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்

CATEGORIES
Share This

COMMENTS