பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் மத்தியஸ்தத்தை எதிர்பார்க்கும் தமிழர் தரப்புக்கள்!

பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் மத்தியஸ்தத்தை எதிர்பார்க்கும் தமிழர் தரப்புக்கள்!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழர் தரப்பை சந்தித்து பேசுவதற்கு அழைப்புவிடுத்துள்ளார்.

தமிழர் தரப்பிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை வருகின்ற ஜனவரி மாதம் 12,13,14 ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், குறித்த பேச்சுவார்த்தையின் போது இந்தியாவின் பங்களிப்பு அவசியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான அதிபர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது இந்தியாவின் மத்தியஸ்தம் அல்லது மேற்பார்வை அவசியம் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர், இதுவரை காலமும் இலங்கையில் உள்ள தமிழர்கள் எதிர்கொண்ட அத்தனை பிரச்சனைகளையும் இந்தியா நன்கு அறிந்து வைத்துள்ளது.

இந்தநிலையில், தமிழர் தரப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தையில் இந்தியாவின் வகிபாகம் இருந்தால் மாத்திரமே தமிழ் மக்கள் சிறந்த தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான குறித்த பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் வகிபாகம் அவசியம் என கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் மற்றும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திய விக்கினேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட தரப்புகளும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS