இனப் பிரச்சினைக்கான தீர்வு: மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தேவையில்லை – எரிக் சொல்ஹெய்ம்

இனப் பிரச்சினைக்கான தீர்வு: மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தேவையில்லை – எரிக் சொல்ஹெய்ம்

இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு தாம் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை என ஜனாதிபதியின் சர்தேச காலநிலை ஆலோசகரும் நோர்வையின் முன்னாள் விசேட சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்..

இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு நோர்வே மாத்திரமல்லாமல் வேறு எந்தவொரு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தமும் தற்போது தேவை இல்லை என எரிக் ஹொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

இனப்பிரச்சினைக்கு உள்ளக ரீதியில் தீர்வு காண்பதற்கான சூழ்நிலைகள் தற்போது உருவாகியுள்ளதாகவும் அதன்படி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பல்லின அடையாளங்களை கொண்ட நாடு என்பதால் அனைத்து இனங்களின் அபிலாஷைகளும் பூர்த்தி செய்யப்படும் வகையில் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS