கிறிஸ்துமஸ் பண்டிகை: 1.5 டன் தக்காளிகளை கொண்டு, வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட மணற்சிற்பம்!

கிறிஸ்துமஸ் பண்டிகை: 1.5 டன் தக்காளிகளை கொண்டு, வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட மணற்சிற்பம்!

இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஆலயங்கள் மற்றும் ஆலய வளாகம் முழுவதும் வண்ண, வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்டு மின்னொளியில் ஜொலித்து வருகின்றன.

இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஒடிசாவில் உள்ள கோலாப்பூர் கடற்கரையில் 1500 கிலோ தக்காளியைப் பயன்படுத்தி பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் தாத்தாவை உருவத்தை மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளார். அந்த சிற்பம் 27 அடி உயரமும் 60 அடி அகலமும் கொண்டது. பட்நாயக்கின் மாணவர்கள் சிற்பத்தை முடிக்க அவருக்கு உதவியுள்ளனர். 1.5 டன் தக்காளிகளை கொண்டு, வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட மணற்சிற்பத்தை டுவிட்டரில் பகிர்ந்த பட்டநாயக், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

CATEGORIES
Share This

COMMENTS