தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் நேற்று சந்திப்பு !

தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் நேற்று சந்திப்பு !

தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று சனிக்கிழமை இரவு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பில் அடுத்த வருடம் தேர்தல் இடம்பெற்றால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கலந்துரையாடியாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் அரசாங்கம் தேர்தலை பிற்போடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக இந்த சந்திப்பின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்திருந்தார்.

இதேவேளை, அடுத்த வருடம் தேர்தலை நடத்துவதற்கு தேவையான பூர்வாங்க ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This