சின்மயின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த வி.ஜே அர்ச்சனா! என்ன சொல்லியிருக்கிறார்?

சின்மயின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த வி.ஜே அர்ச்சனா! என்ன சொல்லியிருக்கிறார்?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் அளித்திருந்தார்.

இது தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் சின்மயிக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு கருத்துகள் எழுந்த நிலையில், வைரமுத்து தான் ஒப்பந்தம் செய்யப்பட்ட எந்தப் படத்திற்கும் அவரை விமர்சித்து ஏன் அவருக்கு வாய்ப்பு தருகிறீர்கள் என்று டுவிட் செய்து வருகிறார்.

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜா ராணி சீரியலில் நடித்து பிரபலமானவர் விஜே அர்ச்சனா.

தற்போது வி.ஜே.அர்ச்சனா கவிஞர் வைரமுத்துவை சந்தித்து புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்த சின்மயி, “இப்படித்தான் ஆரம்பிக்கும். எங்கு செல்ல வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். யாரும் இல்லாமல் வைரமுத்துவை தனியாக சந்திப்பதை தவிர்க்கவும்” என்று கூறியுள்ளார் என்று அறிவுறுத்தினார்.

இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பதிலளிக்கும் முகமாக வி.ஜே அர்ச்சனா தெரிவித்ததாவது,

பாடகி சின்மயி செய்த டுவிட்டர் பதிவிற்கு நான் எந்த பதிலும் அளிக்கப்போவதில்லை.

என் தந்தை தொல்காப்பியத்தில் கலாநிதி பட்டம் பெற்றவர். எங்கள் வீட்டில் தமிழுக்கு பெரும் முக்கியத்துவம் இருக்கிறது.

அனைவரும் வைரமுத்துவின் சினிமா பாடல்களை கேட்டுக்கொண்டிருந்த வேளையில் நான் மட்டும் வைரமுத்துவின் நாட்படு தேறல், நாக்குச் சிவந்தவரே போன்ற பாடல்களைக் கேட்டுக்கொண்டிருப்பேன்.

படப்படிப்புக்கு சென்ற வேளையில் அவரை கண்டேன். உடனே அவரிடம் போய் நான் உங்களின் மிகப்பெரிய ரசிகை என்று கூறினேன்.

அப்போது அங்கு வந்த இயக்குனர் இவர் தான் நான் எடுத்துக் கொண்டிருக்கும் வெப் சீரிஸின் நடிகை எனக்கூறினார்.

வைரமுத்து சாரும் ஓ அப்படியா என வாழ்த்தி அனுப்பினார். எனக்கு எப்போது கற்பனைத் திறன் கொண்டவர்கள் மீது அதிக மரியாதை உண்டு.

ஏதாவது சம்பவம் ஒன்று நடந்தால் அதைப்பற்றி மக்கள் பேசத்தான் செய்வார்கள். ஊர் வாயை நம்மால் அடைக்க முடியாது. சின்மயை இதற்கு முன்பு எல்லாம் எனக்கு தெரியாது.

இந்த சம்பவத்தின் போது தான் அவர் எனக்கு இவ்வாறு கமெண்ட் செய்திருந்தார் என வி.ஜே அர்ச்சனா கூறியிருந்தார்.

CATEGORIES
Share This

COMMENTS