சடுதியாக அதிகரித்த சனத்தொகை – வியப்பை ஏற்படுத்திய கனேடிய மாகாணம்!

சடுதியாக அதிகரித்த சனத்தொகை – வியப்பை ஏற்படுத்திய கனேடிய மாகாணம்!

கனடாவின் மாகாணங்களில் ஒன்றான அல்பர்ட்டாவில் சனத்தொகை அதிகரிப்பு வீதம் உயர்வடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலப் பகுதியில் அல்பர்ட்டாவின் சனத்தொகையானது சுமார் 60000 மாக உயர்வடைந்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

1951ம் ஆண்டில் இருந்து கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த மதிப்பீடுகளை செய்து வருகின்றது. அந்த வகையில், கடந்த ஒக்டோபர் மாதம் அல்பர்ட்டாவின் மொத்த சனத்தொகை 4601314 ஆக உயர்வடைந்துள்ளது.

அண்மைக்காலமாக அல்பர்ட்டாவில் கூடுதல் எண்ணிக்கையில் மக்கள் குடியேறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அல்பர்ட்டாவில் இவ்வாறு சில காலங்களில் அதிக எண்ணகிக்கையிலான மக்கள் குடியேறுவது வழமையான நிலைமை என தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக எரிபொருள் விலை உயர்வின் அடிப்படையில் இவ்வாறு குடிப்பெயர்வில் அதிகரிப்பு காணப்பட்ட போதிலும் இந்த தடவை அதனை விடவும் அதிக எண்ணிக்கையில் மக்கள் குடிப்பெயர்ந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

CATEGORIES
Share This

COMMENTS