கறுப்பு சந்தையால் நிலை குலைந்துள்ள இலங்கையின் பொருளாதாரம்

கறுப்பு சந்தையால் நிலை குலைந்துள்ள இலங்கையின் பொருளாதாரம்

நாட்டின் வீழ்ச்சிக்கு அரச துறைகளில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் மாத்திரம் காரணம் அல்லவென அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரச துறைகளை விட தனியார் பிரிவுகளில் ஊழல் மோசடிகள் அதிகரித்திருப்பது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதற்கு காரணமாகும்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தொழிலாளர்கள் சட்ட விரோதமான முறைகளில் பணம் அனுப்புவதனால் அரச நிதிப்பிரிவு வீழ்ச்சி அடைந்திருப்பதாக அவர் கூறினார்.

நீதியமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.

இலங்கை மத்திய வங்கியின் டொலர் கையிருப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, பொருளாதாரம் மிகவும் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் கறுப்பு சந்தை மூலம் அனுப்பப்படுவதால் மத்திய வங்கிக்கு கிடைக்கும் டொலர்கள் கிடைக்காமல் போகின்றன.

சமகாலத்தில் கறுப்பு சந்தையில் புழக்கத்திலுள்ள டொலர்களின் பெறுமதி பல பில்லியன்கள்களை தாண்டுவதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்த டொலர்கள் சட்ட ரீதியாக வங்கிகள் ஊடாக நாட்டுக்கு கிடைக்கப் பெற்றிருந்தால், இன்றைய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

 

CATEGORIES
Share This