யாழ்.மக்களின் தேவை குறித்து இந்திய துணை தூதுவரிடம் தெரிவிப்பு

யாழ்.மக்களின் தேவை குறித்து இந்திய துணை தூதுவரிடம் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனிற்கும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதனுகும் இடையிலான சந்திப்பு நேற்று (23.12.2022) இடம்பெற்றுள்ளது.

நல்லூரில் அமைந்துள்ள அங்கஜன் இராமநாதனின் மாவட்ட அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வடக்கு மாகாண மக்கள் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் தற்கால பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்த அங்கஜன் இராமநாதன் இந்திய அரசு எமது மக்களுக்கு ஆற்றிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் வறுமை மிகுந்த மாவட்டங்களில் யாழ் மாவட்டமும் உள்ளடங்கியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர் எமது மாவட்ட மக்களுக்கான தேவைகள் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் மேலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

CATEGORIES
Share This

COMMENTS