ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்

ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒரு வருடகாலத்திற்கு ஒத்திவைக்கப்பட உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் முதல் கட்டமாக தேர்தல் ஆறு மாத ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் மேலும் ஆறு மாதம் ஒத்திவைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

எது எப்படி இருந்த போதிலும் தேர்தல் சட்டத்திற்கு அமைய உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் நடத்தப்பட வேண்டும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இந்த மாதம் 28 ஆம் திகதிக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் பேசப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி என்பன இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டாலும் பொதுஜன பெரமுன தனித்தே தேர்தலில் போட்டியிடும் என தெரியவருகிறது.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்ட 80 வீதமானவர்கள் இம்முறையும் அந்த கட்சியின் கீழ் போட்டியிட தயாராகி வருகின்றனர். கடந்த முறை கோட்டா முறையில் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிட்டவர்களும், இம்முறை பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS