முக்கிய பதவியிலிருந்து விலகினார் ஆசு மாரசிங்க

முக்கிய பதவியிலிருந்து விலகினார் ஆசு மாரசிங்க

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பதவியில் இருந்து பேராசிரியரும், முன்னாள் நாடாளமன்ற உறுப்பினருமான ஆசு மாரசிங்க விலகியுள்ளார்.

தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பேராசிரியர் ஆசு மாரசிங்க பதவி விலகியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பதவி விலகலானது உடன் நடைமுறையாகும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS