இலங்கை முழுவதும் நடத்தப்படும் ஆபத்தான விருந்துகள் – பொலிஸார் அதிரடி நடவடிக்கை

இலங்கை முழுவதும் நடத்தப்படும் ஆபத்தான விருந்துகள் – பொலிஸார் அதிரடி நடவடிக்கை

நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டு வருட இறுதி விருதுகள் தொடர்பில் பொலிஸார் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் வேகமாக பரவி வரும் ஐஸ் போதைப்பொருள் பாவனையை குறைக்கும் வகையில் இந்த தரப்பினர் மீது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

`போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மற்றும் அத்தகைய விருந்துகளை ஏற்பாடு செய்பவர்கள், குறிப்பாக ஆண்டு இறுதி விருந்துகளில் ஈடுபடுபவர்கள் குறித்து பொலிஸார் ஏற்கனவே அதிக அக்கறையுடன் உளவுத் தகவல்களை சேகரிக்க தொடங்கியுள்ளார் என்றும் அவர் கூறினார்.

இதுபோன்ற மதுபான விருந்துகள் நடத்தப்படும் பல இடங்களில் தகவல் கிடைத்துள்ளதாகவும், அந்த இடங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

CATEGORIES
Share This

COMMENTS