வவுனியாவில் பொருளாதார நெருக்கடியால் 561 கர்ப்பிணித் தாய்மார் பாதிப்பு

வவுனியாவில் பொருளாதார நெருக்கடியால் 561 கர்ப்பிணித் தாய்மார் பாதிப்பு

வவுனியா மாவட்டத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக 561 கர்ப்பிணித் தாய்மார் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக வவுனியா மாவட்டத்தில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களை கோரிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அதன்படி, வவுனியா மாவட்டத்தின் வவுனியா பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 348 கர்ப்பிணித் தாய்மாரும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 213 கர்ப்பிணித் தாய்மாருமாக 561 பேர் பாதிப்படைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் புத்தெழுச்சி மையங்களை உருவாக்கி பாதிக்கப்பட்ட மக்கள் கவனிக்கப்பட்டு வருவதானால் பொருளாதார நெருக்கடியால் கர்ப்பிணிப் தாய்மாருக்கு நிலையான பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This