வெற்றியை கொண்டாட நாடு முழுவதும் லீவு; தலைநகரில் கூடிய 10 லட்சம் ரசிகர்கள்!

வெற்றியை கொண்டாட நாடு முழுவதும் லீவு; தலைநகரில் கூடிய 10 லட்சம் ரசிகர்கள்!

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா வென்ற நிலையில் அதை கொண்டாட இன்று நாடு முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் நடந்த ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இறுதி போட்டியில் பிரான்ஸ் – அர்ஜெண்டினா அணிகள் மோதிக் கொண்ட நிலையில், பிரான்சை வென்று அர்ஜெண்டினா வரலாற்று வெற்றியை பெற்றது. அர்ஜெண்டினாவின் இந்த வெற்றியை உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

தற்போது உலகக்கோப்பையுடன் அர்ஜெண்டினா வரும் வீரர்களை கௌரவிக்க அர்ஜெண்டினாவும் தயாராகியுள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இன்று அர்ஜெண்டினா முழுவதும் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை வெற்றி தலைநகர் ப்யூனஸ் அயர்ஸில் கொண்டாட உள்ள நிலையில் அங்கு சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குவிந்துள்ளனர். இதனால் அர்ஜெண்டினாவே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS