யாழ். பலாலியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்றவரை காணவில்லை

யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் காணமல்போயுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலியிலிருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்ற இராயப்பு ரொபட் கெனடி (வயது 54) என்பவரே இவ்வாறு காணமல்போனாதாக தெரிவிக்கப்படுகிறது.
படகு கடலில் கவிழ்ந்த நிலையில் காணமல்போன கடற்றொழிலாளரை தேடிச்சென்ற கடற்தொழிலாளர்களால் படகு கண்டுபிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணமல்போன கடற்றொழிலாளரை தேடும் பணி இடம்பெற்று வருகின்றது.
சம்பவம் குறித்து பலாலி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
CATEGORIES செய்திகள்