புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடிக்கவுள்ள அதிஷ்டம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடிக்கவுள்ள அதிஷ்டம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வீட்டுக் கடனைப் பெற்றுக்கொடுக்கும் புதிய வேலைத்திட்டம் சில நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வங்கித் துறை மற்றும் இலங்கை மத்திய வங்கியுடனான கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

புதிய வேலைத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் ஏனைய மக்களை விட குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனைப் பெற முடியும் என அவர் கூறினார்.

இதேவேளை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணப்பரிமாற்றத்தின் அடிப்படையில் உத்தேச வரியற்ற(duty-free) கொடுப்பனவு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உத்தேச கொடுப்பனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி 04 மாதங்கள் கடந்துள்ளதாக மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். “உத்தேச கொடுப்பனவு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கி 04 மாதங்கள் கடந்துள்ள போதிலும், நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகள் இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற சர்வதேச புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

CATEGORIES
Share This