வியட்நாமில் தற்கொலை செய்துகொண்ட யாழ் குடும்பஸ்தரின் சடலம் ஒப்படைப்பு!

வியட்நாமில் தற்கொலை செய்துகொண்ட யாழ் குடும்பஸ்தரின் சடலம் ஒப்படைப்பு!

வியட்நாமில் தற்கொலை செய்துகொண்ட யாழ்ப்பாணத் தமிழரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி, கல்வயல் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரனின் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் நேற்றைய தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்றைய தினம் அவரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று சாவகச்சேரி கண்ணாடிப்பெட்டி மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளித்த நிலையில், கடந்த மாதம் 08 ஆம் திகதி 303 அகதிகளும் வியட்நாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவ்வாறு வியட்நாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இருவர், தங்களை நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என தெரிவித்து கடந்த மாதம் 18 ஆம் திகதி தற்கொலைக்கு முயற்சித்தனர்.

இருவரும் வியட்நாமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS