பேராதனை பல்கலையில் யாழ்ப்பாண மாணவன் மலையக மாணவன் மீது தாக்குதல்

பேராதனை பல்கலையில் யாழ்ப்பாண மாணவன் மலையக மாணவன் மீது தாக்குதல்

பேராதனைப்பல்கலைக்கழகத்தின் கலைப்பீட சிரேஷ்ட மாணவனொருவன் முதலாம் வருட மாணவனைத் தாக்கிய சம்பவமொன்று சனிக்கிழமை (17) பதிவாகியுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விடுதிக்குள் வைத்தே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மதுபோதையில் வந்த சிரேஷ்ட மாணவன் முதலாம் வருட மாணவனை தாக்கியதாகவும் இதன்போது காயமடைந்த மாணவன், பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு இலக்கான முதலாம் வருட மாணவன் நோட்டன் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தாக்குதல் நடத்திய மாணவன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் பேராதனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பேராதனை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS