காரைக்கால்-காங்கோன்துறை கப்பல் சேவை விரைவில் ஆரம்பமாகும்:ஜெயசேயரம்

காரைக்கால்-காங்கோன்துறை கப்பல் சேவை விரைவில் ஆரம்பமாகும்:ஜெயசேயரம்

காரைக்கால்-காங்கோன்துறை கப்பல் சேவை அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்குமென யாழ்.வணிகர் கழக தலைவர் ஜெயசேயரம் தெரிவித்துள்ளார்.

யாழ்.வணிகர் கழகத்தில் நேற்று(18.12.2022) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தைப்பொங்கலின் பின்னர் பெப்ரவரி ஆரம்பத்திற்குள் காரைக்கால் காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பிக்குமென எதிர்பார்க்கிறோம்.

இரண்டு நிறுவனங்கள் இதை ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடலை எம்முடனும் நடத்துகிறார்கள். இது வர்த்தக கப்பல் சேவை. சிறிய கப்பல்கள் தான் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும். அவை 1000 மெட்ரிக் தொன்னிற்கும் குறைவாக கொள்ளளவுடையவை.என கூறியுள்ளார்.

CATEGORIES
Share This