வடமாகாண கல்வித் திணைக்களத்தில் பண மோசடி..! அம்பலமாகிய தகவல்

வடமாகாண கல்வித் திணைக்களத்தில் பணியாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவர் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை சுருட்டியமை அம்பலமாகியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவது, வட மாகாண கல்வித் திணைக்களத்தில் பணியாற்றம் குறித்த உத்தியோகத்தர் ஆசிரியர்களுக்கான சில கொடுப்பனவுகளை வங்கிகளில் வைப்பு செய்யும் பணியை செய்துவந்துள்ளார்.
அவ்வாறு கொடுப்பனவுகளை வைப்பிலிடும்போது சிறிது சிறிதாக பணத்தை கையகப்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES செய்திகள்