இலங்கை தமிழரசு கட்சியின் 75 வது ஆண்டு தொடக்க விழா

இலங்கை தமிழரசு கட்சியின் 75 வது ஆண்டு தொடக்க விழா

இலங்கை தமிழரசு கட்சியின் 75 ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று (18-12-2022) பகல் 9:30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது.

நிகழ்வின் முன்னதாக விருந்தினர்களை வரவேற்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து மங்கல விளக்கேற்றலை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பாகி நடைபெற்றன.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன் பொதுச்செயலாளர் ப. சத்தியலிங்கம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சரவனபவன் சாந்தி சிறீஸ்கந்தராஜா இலங்கை தமிழரசு கட்சியின் செயற்பாட்டாளர்கள் கட்சியின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

CATEGORIES
Share This

COMMENTS