காது இரைச்சல்’ – தீராத தொல்லை

காது இரைச்சல்’ – தீராத தொல்லை

அனைத்து இசையையும், பேச்சையும் கேட்பதற்காக படைக்கப்பட்டது தான் காது. அந்த காதுக்குள்ளேயே இரைச்சல் கேட்பது பலருக்கும் பெரும் தொல்லையாக இருக்கும் இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு அந்த பிரச்சனை உள்ளது. காது இரைச்சல் (Hnnitus) என்பது என்ன? காது இரைச்சல் என்பது நோயே அல்ல. அது ஒரு உணர்வு (Sensation) உடலில் இருக்கும் ஒரு நோயின் வெளிப்பாடு. இதற்கான காரணம் காதிலும் இருக்கலாம். உடலில் வேறு பகுதியிலும் இருக்கலாம்.

காதுக்குள் வண்டு ரீங்காரம் செய்வது போன்றோ, விசில் அடிப்பது போன்றோ, அல்லது ‘ஸ்விங்’ என்று காற்று அடிப்பது போன்றோ இருந்தால் ஒரு நபருக்கு காது இரைச்சல் இருக்கிறது என அர்த்தம். இந்தப் பிரச்சனை சிலருக்கு விட்டு விட்டு இருக்கும். வேறு சிலருக்கு தாங்க முடியாத அளவுக்கு கடுமையாக இருக்கும். இந்த இரைச்சல் சுற்றுப்புற சூழல் அமைதியாக இருந்தால் அதிகமாக தெரியும். குறிப்பாக இரவில் இதனால் தூக்கம் குறைவதுடன் மனஅழுத்தம் அதிகரிக்கும்.

தற்காலிக காரணங்கள்

* வெளிக்காதில் இயற்கையாக சுரக்கின்ற மெழுகு கட்டி யாகி காதை அடைத்துக்கொள்ளுதல். * அயல் பொருட்கள் ஏதாவது அடைத்துக் கொண்டால்.

* காளான் தொற்று ஏற்பட்டால் * அடிக்கடி சளி பிடிப்பதால் * நடுக்காதில் நீர் கோர்த்துக் கொண்டால் மற்றும் சீழ் பிடித்தால் காதில் இரைச்சல் கேட்கும்.

* தொண்டையையும் காதையும் இணைக்கிற ‘காது மூக்கு தொண்டைக்குழாய் சுழற்சி அடைந்து வீங்கிக் கொண்டாலும் காது இரைச் சல் வரும். ஒலி மாசு தரும் போது இரைச்சல் ஒலி மாசு இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம். பெருநகரங்களில் சாதாரண மாக 90 டெசிபல் சத்தம் கேட்டுக் கொண்டிருக் கிறது.

 

CATEGORIES
Share This

COMMENTS