இந்தியாவில் ‘அவதார் 2’ முதல் நாளில் ரூ.41 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை

இந்தியாவில் ‘அவதார் 2’ முதல் நாளில் ரூ.41 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ள காட்சியாக அமைந்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தியது. 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ‘அவதார் தி வே ஆப் வாட்டர்’ என்ற பெயரில் தயாராகி ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் நேற்று முன் தினம் வெளியானது. இந்த நிலையில் இந்தியாவில் ‘அவதார் 2’ திரைப்படம் முதல் நாளில் ரூ.41 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துள்ளது. மேலும், ‘அவெஞ்சர்ஸ்’ படத்திற்கு பின் இந்தியாவில் பெரிய ஓபனர் என்ற இடத்தையும் ‘அவதார் 2’ பிடித்ததுள்ளது.

 

CATEGORIES
Share This

COMMENTS