யாழில் கரையொதுங்கிய அகதிகள் படகு – வெளியாகிய படங்கள்

யாழில் கரையொதுங்கிய அகதிகள் படகு – வெளியாகிய படங்கள்

யாழ்ப்பாணம் – மருதங்கேணி, கட்டைக்காடு கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்த சுமார் 130 பேரும் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கட்டைக்காட்டு கடற்பரப்பிலிந்து 5 கடல் மைல் தொலைவில் குறித்த படகு கரை ஒதுங்கி வந்த நிலையில் பிரதேச கடற்தொழிலாளர்களினால் இது தொடர்பில் சிறிலங்கா கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த படகிலிருந்தவர்களை மீட்கும் பணிகளுக்காக 4 கடற்படைக் கப்பல்கள் அனுப்பி மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,

குறித்த படகில் அதிகளவான சிறுவர்கள் காணப்படுவதாகவும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான விபரங்கள் கண்டறியப்படவில்லையெனவும் சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

 

CATEGORIES
Share This