சர்வக்கட்சி தலைவர் கூட்டம் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறை – எரிக் சொல்ஹெய்ம்

சர்வக்கட்சி தலைவர் கூட்டம் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறை – எரிக் சொல்ஹெய்ம்

சர்வக்கட்சி தலைவர் கூட்டம், இலங்கையின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறை என சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் பசுமை நிலைபேறான திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வந்துள்ள அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களை நெருக்கடி நிலையில் இருந்து மீட்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் பெரும்பாலானோருக்கு உணவு பற்றாக்குறை காணப்படுவதாகவும் இதற்காகவும் சர்வதேச சமூகத்துடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS