நவம்பரில் மட்டும் 90 எச்ஐவி தொற்று உறுதியான நபர்கள் அடையாளம் !

நவம்பரில் மட்டும் 90 எச்ஐவி தொற்று உறுதியான நபர்கள் அடையாளம் !

நவம்பரில் 90 எச்ஐவி தொற்று உறுதியான நபர்கள் கண்டறியப்பட்டனர் என்றும் இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 568 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை கருவிகள் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதை எளிதாக்கியுள்ளன என தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

எச்.ஐ.வி சுய-பரிசோதனை கருவிகளை நாடு முழுவதும் உள்ள தேசிய பாலியல் நோய் பிரிவுகளில் பெறமுடியும் என்றும் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

மேலும் கிளினிக்குகளுக்கு செல்ல விரும்பாதவர்கள், know4sure.lk என்ற இணையதளத்தில் கிட் ஒன்றைப் பெற்று அதை தங்கள் வீடுகளுக்கு டெலிவரி செய்யலாம்.

CATEGORIES
Share This

COMMENTS