ஜெனிவாவை இலக்குவைத்து ரணிலின் அதிரடி நகர்வு

ஜெனிவாவை இலக்குவைத்து ரணிலின் அதிரடி நகர்வு

ரணில் – தமிழ் அரசியல்வாதிகளுடனான பேச்சுவார்த்தை என்பது ஜெனிவாவின் காட்சிப்படுத்தலுக்காக இடம்பெற்ற ஒன்று என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன்.

அடுத்த வருடம் மார்ச் மாதம் ஜெனிவாவால் வழங்கப்படவுள்ள அறிக்கை, ரணில் அரசாங்கத்தை பாராட்டுவதாகவும் மக்களின் ஜனநாயக பிரச்சினைக்கான ஒரு தீர்வாகவும் இந்தக் கலந்துரையாடலை காட்சிப்படுத்துவதற்காகவே ரணில் இவ்வாறு செயற்படுகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.

 

தமிழ் அரசியல்வாதிகளுடனான பேச்சுவார்த்தைக்கு ரணில் வடக்கிலுள்ள அரசியல்வாதிகளையே அழைத்தார். இதனால் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற கோட்பாடு உடைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், அழைப்பு விடுக்கப்பட்டதைப் போன்று அங்கு இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெறவில்லை. மாறாக சர்வகட்சி கூட்டமாகவே அது அமைந்தது.

எனவே இதை தமிழர் தரப்புடனான பேச்சுவார்த்தை என நாம் கூற முடியாது என அவர் கூறுகிறார்.

CATEGORIES
Share This

COMMENTS