கூந்தல் உதிர்வு, இளநரை பிரச்சனையை தீர்க்கும் ஆர்கானிக் எண்ணெய்

கூந்தல் உதிர்வு, இளநரை பிரச்சனையை தீர்க்கும் ஆர்கானிக் எண்ணெய்

தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய் – 500 மி நல்லெண்ணெய் – 100 மி கரிசலாங்கண்ணி இலைகள் – 2 கைப்பிடி அரைக்க வேண்டியவை சின்ன வெங்காயம் – 20 செம்பருத்தி இலை – 2 கைப்பிடி கறிவேப்பிலை – 2 கைப்பிடி கருஞ்சீரகம் – 2 ஸ்பூன் மருதாணி – 1 கைப்பிடி நெல்லிக்காய் – 10 வெந்தயம் – 2 ஸ்பூன் கற்றாழை – 2 இதழ்.

செய்முறை அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து 3 எண்ணெயை ஊற்றி மிதமாக சூடானதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கலக்கவும். அடிபிடிக்காமல் இருக்க பொறுமையாக சிறிது நேர இடைவெளியில் கிளறிக் கொண்டே இருக்கவும். நுரை அடங்கும் வரை காய வைத்து இறக்கி ஆற விடவும். இப்போது எண்ணெய் நன்கு கரும்பச்சை நிறத்தில் இருக்கும். இதனை பாட்டிலில் சேகரித்து தினமும் பயன்படுத்தி வர கூந்தல் நன்கு வளர்ந்து இளநரை உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும். குறிப்பு: சளி பிடிக்கும் பிரச்சனை இருப்பவர்கள் கற்றாழை பயன்படுத்துவதை தவிர்த்து விடவும்.

 

CATEGORIES
Share This

COMMENTS