குட்டி சங்கக்கார என அழைக்கப்படும் சாருஜனுக்கு கிடைத்த விருது

குட்டி சங்கக்கார என அழைக்கப்படும் சாருஜனுக்கு கிடைத்த விருது

குட்டி சங்கக்கார என அழைக்கப்படும் சாருஜன் சண்முகநாதனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

15 ஆண்டுகளுக்கு முன்னதாக பிரபல கிரிக்கெட் வர்ணணையாளர் மறைந்த டோனி கிரெக், சாருஜனை குட்டி சங்கக்கார என அழைத்திருந்தார்.

கடந்த 2011ம் ஆண்டு அவுஸ்திரேலிய – இலங்கை அணிகளுக்கு இடையில் கொழும்பு எஸ்.எஸ்.சீ மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் போது சாருஜன் மைதானத்திற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.

நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார போன்றே அவர் கவர் ட்ரைவ்களை அடிப்பதனை பார்த்த டோனி கிரேக் சாருஜனை குட்டி சங்கா என அழைத்தார்.

அதன் பின்னர் உள்நாட்டு வெளிநாட்டு ரசிகர்களினால் சாருஜன், குட்டி சங்கா என அழைக்கப்பட்டார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் சாருஜன் வருடாந்த பாடசாலை விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த விக்கட் காப்பாளர் விருதினை வென்றுள்ளார்.

பிரபல விளையாட்டுத்துறை சார் ஊடகவியலாளர் ரெக்ஸ் கிளமன்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விருது குறித்த பதிவொன்றை இட்டுள்ளார்.

 

CATEGORIES
Share This

COMMENTS