இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 இலட்சத்து 44 ஆயிரத்து 186 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தின் முதல் 7 நாட்களில் மாத்திரம் 16 ஆயிரத்து 168 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதுவரையிலும் 20 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்களில் அதிகமானோர் ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 510 பேர் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த 78 ஆயிரத்து 827 பேரும், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 74 ஆயிரத்து 713 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS