யாழ்ப்பாணத்தில் இரண்டு நாய்களை உயிருடன் விழுங்கிய முதலை

யாழ்ப்பாணத்தில் இரண்டு நாய்களை உயிருடன் விழுங்கிய முதலை

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இரண்டு நாய்களை உயிருடன் விழுங்கிய முதலையை ஊர் மக்கள் மடக்கி பிடித்துள்ளனர். முதலை எட்டடி நீளமானது என தெரியவருகின்றது.

சாவகச்சேரி சிவன் கோவிலடியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றினுள் நேற்று முன்தினம் புதன் கிழமை இரவு உட்புகுந்த சுமார் எட்டடி நீளமான முதலை நாய்கள் இரண்டை விழுங்கி விட்டு அசைய முடியாத நிலையில் அங்கேயே உறங்கியுள்ளது.

விடுதி பணியாளர்கள் காலையில் நாய்களை காணவில்லை என தேடிய போது, விடுதி வளாகத்தில் முதலை ஒன்று உறக்கத்தில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் அயலவர்களின் உதவியுடன் முதலையை உயிருடன் பிடித்து மரமொன்றில் கட்டி வைத்து இது தொடர்பில் வனவிலங்கு பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ளனர்.அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முதலையை மீட்டு சென்றுள்ளனர்.

கடந்த மாதமும் சாவகச்சேரி கல்வ யல் பகுதியில் முதலை ஒன்று குடி மனைக்குள் இருந்து கண்டுபிடிக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS