சமூக ஊடக செயற்பாட்டாளர் டிலான் சேனாநாயக்க மீது கத்திக்குத்து!

சமூக ஊடக செயற்பாட்டாளர் டிலான் சேனாநாயக்க மீது கத்திக்குத்து!

சமூக ஊடக செயற்பாட்டாளர் டிலான் சேனாநாயக்க மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நுகேகொட, பகொட வீதியில் அமைந்துள்ள அவரது கலையகத்தில் வைத்து நேற்று (புதன்கிழமை) இரவு அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

கையில் காயத்துக்குள்ளான அவர், களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரை இருவர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்த மிரிஹான பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறினர்.

 

CATEGORIES
Share This

COMMENTS