யாழில் நபரொருவருக்கு அடித்த அதிஸ்டம் – சீட்டிழுப்பில் கிடைத்த கோடிக்கணக்கான பணம்

நேற்றையதினம் சீட்டிழுக்கப்பட்ட தேசிய லொத்தர் சபையின் மகஜன சம்பத சீட்டிழுப்பின் ஊடாக சூப்பர் பரிசான 19,710,564/= ரூபா வெல்லப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சங்கானைப் பிரதேச தேசிய லொத்தர் சபையின் அதிர்ஸ்ட லாப சீட்டு விற்பனை முகவர் ஊடாக குறித்த ஒரு கோடியே 97 லட்சம் பெறுமதியான அதிர்ஸ்ட லாப சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை குறித்த முகவருடாக 2020 ஆம் ஆண்டு மூன்று கோடியே 71 லட்சத்திற்கும் அதிகமான பணப்பரிசை வெல்வதற்கான அதிர்ஸ்ட இலாபச் சீட்டு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Viral News