கல்வி அமைச்சின் மோசடிகளுக்கு ஆளுநரும் உடந்தையா? வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக போராட்டம்!

கல்வி அமைச்சின் மோசடிகளுக்கு ஆளுநரும் உடந்தையா? வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக போராட்டம்!

வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிராகவே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் நிர்வாக முறைக்கேடுகளுக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போலி சான்றிதழ் வழங்கிய மோசடி நியமனங்களுக்கு எவ்வளவு கையூட்டல் பெற்றீர்கள், மோசடிகளை ஒழிப்பேன் என்ற உங்கள் வாக்குறுதிகள் எங்கே?, பேஸ்புக் செயலாளர் வடக்கு கல்வியில் எதற்கு? கல்வி அமைச்சின் மோசடிகளுக்கு ஆளுநரும் உடந்தையா? எனும் பல்வேறு வாசகங்களை கொண்ட பதாதைகளை ஏந்தி இருந்தனர்.

பின்னர், ஆசிரியர் சங்கம் சார்பில் போராட்டத்தை மேற்கொண்டவர்களை ஆளுநர் செயலகத்திற்குள் அழைத்து பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

CATEGORIES
Share This