இலங்கையில் பெரும்பாலான மக்களின் முடிவு இதுதான் -ஆய்வில் வெளிவந்த பகீர் தகவல்

இலங்கையில் பெரும்பாலான மக்களின் முடிவு இதுதான் -ஆய்வில் வெளிவந்த பகீர் தகவல்

இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிராக உள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

USAID உடன் இணைந்து பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட தலைமையிலான சமூக விஞ்ஞானிகள் சங்கம் நடத்திய ஆய்வில்,இது தெரியவந்துள்ளது.

இதன்படி 93. 8% இளைய தலைமுறையினரும், 93.2% முதியவர்களும் தேசிய சொத்துக்களை விற்பதற்கு எதிராக உள்ளமை தெரியவந்துள்ளது. 42.1% இளைஞர்களும், 47.4% முதியவர்களும் மட்டுமே அரசுத் துறைக்கு ஆட்களை சேர்ப்பது குறைக்கப்பட வேண்டும் என்று நம்புகிறார்கள்.

ஆய்வறிக்கையின்படி, இலங்கையில் போருக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்காலத்தில் நாட்டிற்குச் சில நன்மைகளை ஏற்படுத்தும் என 69.1% இளைஞர்களும் 69.4% முதியவர்களும் நம்புகின்றனர்.

இதற்கிடையில், 76.6% இளைஞர்களும், 71.9% முதியவர்களும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஆட்சியாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று நம்புவதாகவும், 32.4% இளைஞர்களும் 28% முதியவர்களும் கொவிட் தொற்றுநோய் பொருளாதார வீழ்ச்சிக்கு பங்களித்தது என்று நம்புவதாகவும் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

CATEGORIES
Share This

COMMENTS