பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீட பேராசிரியர்கள் விரிவுரைகளிலிருந்து விலக தீர்மானம்!

பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீட பேராசிரியர்கள் விரிவுரைகளிலிருந்து விலக தீர்மானம்!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பேராசிரியர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விரிவுரைகளிலிருந்து விலக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலை பீடத்தைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் தாக்குதலில் கலந்து கொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தரும் ஊடகப் பேச்சாளருமான பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS