இளைஞர்கள் சிகரெட் வாங்க தடை.. புகையில்லா நாடாக மாற்ற திட்டம்!

இளைஞர்கள் சிகரெட் வாங்க தடை.. புகையில்லா நாடாக மாற்ற திட்டம்!

நியூசிலாந்து நாட்டில் இளைஞர்கள் சிகரெட் வாங்கும் சிகரெட் புகைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நியூசிலாந்து நாட்டை புகை இல்லா நாடாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ள நிலையில் புகையிலைக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் நியூசிலாந்தில் இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கும் சிகரெட் புகைப்பதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது

புகைபிடிக்கும் பழக்கத்தை நாட்டு மக்களிடமும் படிப்படியாக குறைத்து 2025-ஆம் ஆண்டுக்குள் புகைபிடிக்க நாடாக மாற்ற நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது

நியூசிலாந்து நாடு போலவே இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் இளைஞர்கள் புகைபிடிக்க தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

CATEGORIES
Share This

COMMENTS