பல்கலை மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி?

பல்கலை மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி?

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு இராணுவ தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

‘பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் அதிகரித்துள்ளன. பட்டப்படடிப்பை நிறைவுசெய்யாத 700 முதல் 800 வரையான மாணவர்கள் எல்லா பல்கலைக்கழகங்களிலும் இருக்கின்றனர்.

இவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர். ஜே.வி.பி. மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சிகளை சேர்ந்தவர்களே அவர்கள். இவர்கள்தான் குழப்பம் விளைவிக்கின்றனர். இதற்கு முடிவு கட்ட வேண்டும்.

அதேவேளை, பல்கலைக்கழகம் தெரிவாகும் மாணவர்களுக்கு, மூன்று, நான்கு மாதங்களாவது இராணுவ தலைமைத்துவ பயிற்சி வழங்க வேண்டும்.“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This