கட்சியை உடைக்கும் செயலை ரணில் செய்ய மாட்டார் – பசிலுக்கு கிடைத்த வாக்குறுதி

கட்சியை உடைக்கும் செயலை ரணில் செய்ய மாட்டார் – பசிலுக்கு கிடைத்த வாக்குறுதி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன , ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய வேண்டும் என்று மக்கள் தீர்மானத்தால் அந்த தீர்மானத்தை ஏற்பதற்கு நாம் தயார் என கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் தமது கட்சியை பலவீனப்படுத்துவதற்கான எவ்வித நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கப்படக் கூடாது என ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாக பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

எமது கட்சியை பலவீனப்படுத்துவதற்கு எவரேனும் முயற்சிப்பார்களாயின் அதற்கு இடமளிக்க வேண்டாம் என்றும் இதன் போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கமைய எமது கட்சியை பலவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி இதன் போது வாக்குறுதியளித்தார்.

அத்தோடு இந்திய புலனாய்வு பிரிவின் தலைவரின் கோரிக்கைக்கு அமைய , அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் அவரை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

CATEGORIES
Share This

COMMENTS