“ரணிலின் தீர்வு மேசை அழைப்பு தமிழீழத் தலைவர்களுக்கு சூழ்ச்சி வலை விரிப்பு”

“ரணிலின் தீர்வு மேசை அழைப்பு தமிழீழத் தலைவர்களுக்கு சூழ்ச்சி வலை விரிப்பு”

“தீர்வு மேசை என்பது சிங்களவர்களின் பசிதீர்க்கும் தீர்வே தவிர தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையைத் தீர்க்கும் தீர்வல்ல என்பதை தமிழீழ தலைவர்கள் முதலில் உணர வேண்டும்.”என ஈழத் தமிழர் நட்புறவு மைய தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில்,“முன் நிபந்தனையோடு நீங்கள் ஏன் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்புக்கு முகம்கொடுக்கவில்லை என்பதே என் முதல் கேள்வியாகும்.

சிங்கள படைகளை உங்கள் மண்ணில் வைத்துக்கொண்டு தமிழீழ மக்களுக்குச் ‘சமஸ்டி கேட்கிறீர்களே-இது என்ன வெங்காயச் சமஸ்டி.

தமிழீழத்தில் நிலைகொண்டிருக்கும் இரண்டு இலட்சம் சிங்கள படைகளையும் வெளியேற்று நாங்கள் உன் தீர்வு மேசைக்கு வருகிறோம் என்று ரணில் விக்ரமசிங்கவைப் பார்த்து நீங்கள் கூறியிருக்க வேண்டுமா? இல்லையா?

சிங்கள அரசியல் அமைப்பின் ஆறாவது திருத்தச்சட்டம் தமிழீழ விடுதலை பேசுவதைத் தேசத்துரோகமாக ஆக்கியிருப்பதால் இலங்கையில் வாழும் தமிழர் தலைவர்கள் “இயலாமை”யில் சிக்கியிருப்பதை நான் அறிவேன்.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This