அதிசயிக்கவைக்கும் நாசாவின் புதிய புகைப்படம்….!

நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் விண்வெளியில் அவ்வபோது எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் அரிய காணொளிகளை வெளியிட்டு கொண்டிருக்கிறது.
விண்கலத்தின் மூலமாகவோ அல்லது தொலைநோக்கிகளின் மூலமாகவோ எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களும், கானொளிகளும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
அந்த வகையில் நாசா ஆய்வு நிறுவனம் தற்போது சனி கிரகத்தின் அரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது .
கடந்த 2012 -ஆம் வருடம் காசினி மின்கலத்தால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் சூரியன் பின்னாலிருந்து ஒளி வீச சனி கிரகத்தின் நிழலில் இருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. தற்போது அற்புதமான இந்த புகைப்படத்தை இணையதளவாசிகள் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
CATEGORIES Viral News