காலிமுகத்திடல் எதிர்ப்பாளர்கள் உருவாக்கியுள்ள புதிய குழு

இலங்கையின் காலிமுகத்திடல் அரசாங்க அரகலய எதிர்ப்பாளர்கள், உள்ளூராட்சித் தேர்தலுக்கு இளம் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக கலந்துரையாடல் குழுவொன்றை உருவாக்கியுள்ளனர்.
அரகலய எக்ஸ்கோர் என்ற இந்த அமைப்பு நேற்று (12.12.2022) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு நாட்டில் பொது பதவியை நாடும் திறன்மிக்க இளைஞர் தலைவர்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.
இது ஒரு அரசியல் கட்சி அல்ல, ஆனால் இது சாத்தியமான வேட்பாளர்களை வெளியே கொண்டு வருவதற்கான ஒரு இயக்கம் என்று அரகலயா எக்ஸ்கோரின் ஒருங்கிணைப்பாளர் நிபுன் தாரக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உள்ளூராட்சி தேர்தலுக்குள் எங்கள் பிரதிநிதிகளை தயார்படுத்தப்போவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES செய்திகள்