சிறுநீரகப் பிரச்சினைக்கு முடிவு கட்டும் வெங்காய சட்னி!

சிறுநீரகப் பிரச்சினைக்கு முடிவு கட்டும் வெங்காய சட்னி!

சின்ன வெங்காயத்தில் சட்னி செய்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

சின்ன வெங்காயத்தை வதக்கியோ அல்லது வேகவைத்தோ எப்படி வேண்டும் என்றாலும் சாப்பிடலாம்.

பச்சையாக சாப்பிட்டால் அதில் இருக்கும் ஊட்டச்சத்து முழுமையாகக் கிடைக்கும்.

அடிக்கடி சின்ன வெங்காயத்தினை உணவில் சேர்த்தால் சிறுநீரகப் பிரச்சினை முதல் உடல் எடை குறைவது, கொழுப்பைக் குறைப்பது வரை அத்தனை பிரச்சினைகளுக்கும் மிகச் சிறந்த தீர்வாக இருக்கும்.

இன்று நாம் மருத்துவ பலன்களை கொண்ட வெங்காயத்தினை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வெங்காயம் – 1 கப் (நறுக்கியது)
பூண்டு – 1-2 பல் (நறுக்கியது)
காஷ்மீரி மிளகாய் – 2-3
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
புளி – ஒரு சிறிய துண்டு
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

பின்பு அதில் மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

பிறகு வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின் வதக்கிய அனைத்தையும் அரைத்து எடுத்து அத்துடன் சுவைக்கேற்ப உப்பு மற்றும் புளி சேர்த்து கொள்ளுங்கள்.

பின்னர் மீண்டும் பாத்திரத்தினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

அதில் அரைத்த கலவைகளை சேர்த்து 2 நிமிடத்தில் அடுப்பை அனைத்து விடுங்கள். சுவையான சட்னி தயாராகி விடும்.

CATEGORIES
Share This

COMMENTS