உலகக்கோப்பை கால்பந்து: வெற்றி கொண்டாட்டத்தில் வெடித்த பயங்கர கலவரம்

உலகக்கோப்பை கால்பந்து: வெற்றி கொண்டாட்டத்தில் வெடித்த பயங்கர கலவரம்

உலக கோப்பை கால்பந்து போட்டியின் வெற்றி விழாவை கொண்டாடிய போது பயங்கர கலவரம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உலக கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி போட்டியில் நேற்று இங்கிலாந்து – பிரான்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை பிரான்ஸ் அணி வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த பிரான்ஸ் அணியின் வெற்றியை கொண்டாட பாரிஸ் தெருக்களில் கால்பந்து ரசிகர்கள் கோஷமிட்டு பட்டாசுகளை கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

அப்போது போலீசார் அந்த கொண்டாட்டத்தை தடுக்க முயற்சி செய்தபோது திடீரென கலவரமாக வெடித்தது. இதனை அடுத்து கண்ணீர் புகை குண்டுவீசி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

CATEGORIES
Share This

COMMENTS