டயானா கமகேவின் பதவியை இரத்துச் செய்ய கோரி மனு – நீதிமன்றத்தில் வெளிவந்த உண்மைகள்

டயானா கமகேவின் பதவியை இரத்துச் செய்ய கோரி மனு – நீதிமன்றத்தில் வெளிவந்த உண்மைகள்

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று(12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி குறித்த விசாரணை மேற்கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​மனுதாரர் ஓஷல ஹேரத் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் மற்றும் அதிபர் சட்டத்தரணி ஃபர்மன் காசிம், சமகி ஜன பலவேகயவின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் சார்பில் முன்னிலையாகியிருந்தனர்.

இந்த வழக்கை அவசர வழக்காகக் கருதி நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்துள்ளதாக எதிர்மனுதாரர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This