போதை பொருளுக்கு எதிராக தீவக இளைஞர்களால் போராட்டம் முன்னெடுப்பு

போதை பொருளுக்கு எதிராக தீவக இளைஞர்களால் போராட்டம் முன்னெடுப்பு

போதை பொருளுக்கு எதிராக தீவக இளைஞர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்து

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தீவக மறைக்கோட்டத்துக்கு உட்டபட்ட பங்குகளை சேர்நத இளைஞர்கள் வேலனை பிரதேசத்தில் போதை வஸ்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

ஒரு பிரிவினர் மண்கும்பான் சந்தியிலிருந்தும், இன்னொரு பிரிவினர் வங்கலாவடி சந்தியிலிருந்து போராட்டத்தை ஆரம்பித்து சாட்டி திருத்தலத்தை நோக்கி பாதாதைகளை ஏந்தி போதைப்பொருளுக்கெதிராக குரல் கொடுத்தார்கள்.

குறித்த போராட்டத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார், தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி டேவிட் அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொலிசார், உத்தியோகத்தர்கள் நலன் விரும்பிகள், இளையோர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். .

CATEGORIES
Share This